திமுகவின் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள் தேர்தலுக்காகவே: சீமான் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளரின் சால்டின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மக்களின் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு தற்போது வரை செயல்படுத்தாத நிலையில் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமே, இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறதா குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் ஆளுனர் என்பது, அரசுகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்து ஒற்றன் வேலை செய்வதே அவருடைய பணியாகும். எந்த தேர்தல் வந்தாலும் அதிகளவில் வேட்பாளர்களை மிரட்டுவது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தான். எந்த நிலையிலும் எதுவும் நிரந்தரம் என்பதை அரசியல் கட்சிகள் கூற முடியாது. அதற்கு உதாரணம் நிரந்தர முதல்வர் என் ஜெயலலிதாவை கூறிய நிலையில் தற்போது என்ன நிலை.
தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளது மக்கள் சேவை செய்ய வா? 50 ஆண்டுக்கு முன்னர் அப்போதைய அரசியல்வாதிகள் பல நூறு ஏக்கர்களை மக்கள் பயன்பாட்டிற்காக அளித்துள்ள நிலையில் தற்போதைய அரசியல்வாதிகள் அவற்றை அரவணைத்து கொள்வதிலேயே குறியாக உள்ளனர்.
எந்த ஒரு தேர்தல் நடைபெற்றாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு வருகிறது. தற்போதைய தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் மேயர் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். யாருக்காகவும் ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்தார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர்கள், நாம் தமிழர் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu