கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை இறை வணக்கத்திற்காக கூடிய மாணவிகள்

கடந்த 45 நாட்களாக பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை அளித்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இறை வணக்கத்துடன் இன்று துவங்கியது.

கடந்தாண்டு நடைபெற்ற அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரசு பொது தேர்வுகளுக்கு பிறகு 45 நாட்கள் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் இன்று காலை தமிழக முழுவதும் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.


அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை கோடை விடுமுறைக்கு பின் அனைத்து துவக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளில் காலை இறை வணக்கத்துடன் துவங்கியது.

பள்ளி காலை இறை வணக்கம் கூட்டத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு மீண்டும் இதே சாதனைகள் தொடர வேண்டுமென பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


பள்ளி துவங்கிய இன்றே பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story