காஞ்சிபுரத்தில் மீண்டும் தொடங்கிய வகுப்புகள்- மாணவர்கள் உற்சாகம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், கல்வி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த கனமழையால், மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 257 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியன. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, நீர் வரத்து குறைந்துள்ளதால் நேற்று முதல் 500 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, மழைப்பொழிவு மிகவும் குறைந்ததால், இன்றுமுதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த ஒரு வார காலமாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளை ஒட்டி வாழ்ந்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சிறப்பு முகாம்களில், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பள்ளிகளில் செயல்படும் நிவாரண முகாம்கள் உள்ளதால் அந்த இரு பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அதேபோல், வாலாஜாபாத் பாலாற்றில் தரை பாலத்திற்கு மேல் நீர் செல்வதால், வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை போக்குவரத்து 4வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்புற மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல இயலாத நிலையை ஒட்டி அப்பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி, எட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீர்த்தேக்கத்தை அகற்றுதல் மின்சாரம் பராமரிப்பு கழிவறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், ஒருசில பள்ளிகள் அதை கடைபிடிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu