செய்யாற்றில் வெள்ளம் காரணமாக தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்புகள்
பைல் படம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மூடபட்ட நிலையில் 18 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்வித்துறை நேற்று வரை விடுமுறை அளித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் கிராமத்தில் உள்ள மாணவர்கள் செய்யாற்றை கடந்து நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். வெள்ளம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பு கருதி அனுப்பாமல் இருந்தனர்.
தற்போது கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிவேகமாக வெள்ள நீர் செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி இளையனார்வேலூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்புகள் துவங்க அனைத்து ஏற்பாடுகளையும் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் ஏற்பாடு செய்து அதற்கான ஆசிரியர்களை நியமனம் செய்து உள்ளனர்.
நாளை விடுமுறை இல்லை எனில் பள்ளி செயல்படத் துவங்கினால் திருமண மண்டபத்திலேயே வகுப்புகள் துவங்கும் என அப்பகுதி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu