சாம்சங் தொழிலாளர்கள் அமைச்சருடன் நாளை மதியம் மீண்டும் பேச்சு வார்த்தை

சாம்சங் தொழிலாளர்கள் அமைச்சருடன் நாளை மதியம் மீண்டும் பேச்சு வார்த்தை

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள்  நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுங்குவார்சத்திரம் அருகே 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தொழிலாளர் நல அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நாளை மதியம் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, போன்ற வீட்டு உபயோக பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொழிற்சாலையில் பணி செய்யும், ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ், எட்டு மணி நேரம் பணி நிர்ணயம் செய்வது, உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வரை, இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மதியம் 1 மணியளவில் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) கமலக்கண்ணன் தலைமையில் சாம்சங் நிர்வாகம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க ஊழியர்கள் உடனான பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார், சாம்சங் நிர்வாகத்திலிருந்து ஆலோசனை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் சிஐடியு தொழிற்சங்க ஊழியர்கள் பெரும்பான்மை ஊழியர்கள் உள்ள குழுவினை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சாம்சங் நிறுவனத்திடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

இதற்கு சாம்சங் நிர்வாகம் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தங்களது போராட்டம் தொடரும் என சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி இன்று நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. மேலும் சாம்சங் நிர்வாகத்திடம், தொழிற்சங்க ஊழியர்களுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 13ஆம் தேதி நடைபெறும் என இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சாலை விதிகளை மதிப்போம், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிய மாட்டோம், போராட்ட நேரத்தை முறையாக கடைப்பிடிப்போம், போராடும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி மொழி எடுத்துக் கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை ஆதரித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகள் உரையாற்றி வருகின்றனர்

இந்நிலையில் இன்று தமிழக தொழிலாளர் நல அமைச்சர் சி வி .கணேசன் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சிஐடி சங்கத்தினர் என அனைவரும் கலந்து கொண்ட நிலையில் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில் நாளை மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிய வந்து உள்ளது.

Tags

Next Story