சாலை விபத்தில் சிக்கிய சாம்சங் தொழிலாளர்கள்: போலீசாருடன் வாக்குவாதம்

சாலை விபத்தில் சிக்கிய சாம்சங் தொழிலாளர்கள்: போலீசாருடன் வாக்குவாதம்
X

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள்

சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்ட திடலுக்கு சரக்கு வாகனத்தில் பயணித்த போது விபத்து ஏற்பட்டது.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்திற்கு சிறிய லோடு வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு 10 பேர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடனான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது


அதன்படி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பந்தலுக்கு வந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு சிலர் அந்த வழியாக சென்ற சிறிய ரக லோடு வண்டியில் லிப்டு கேட்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி சிறிய லோடு வண்டியில் உரசியதால் லோடு வண்டி கவிழ்ந்தது இதனால் அந்த வாகனத்தில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் வாகனத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர் .மேலும் தகவல் அறிந்து வந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்ததால் போலீசாருக்கும் சாம்சங் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

மேலும் அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த ஊழியர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அப்போது போலீசாருக்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags

Next Story