சாம்சங் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி : தொடரும் போராட்டம்...!

சாம்சங் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி : தொடரும் போராட்டம்...!
X

சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்ற போது

ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் 8 மணி நேர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் துணை மற்றும் இணை ஆணையர் முன்னிலையில் சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையேயான இடையான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சாலை ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம், எட்டு மணிநேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தப் போராட்டத்தை சமூக தீர்வு காண ஏற்கனவே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மூன்று முறையும் சென்னையில் இரண்டு முறையும் பேச்சுவார்த்தை நடைபெற்று சுமுகத்தேர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து விரைந்து தீர்வு காண அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி ஆர் பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இன்று இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் (சமரசம்) கமலக்கண்ணன், இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் samsung தொழிற்சாலை ஊழியர்கள் ஏழு பேர் கொண்ட குழுவும், சாம்சங் தொழிற்சாலை நிர்வாக மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் 3 பேர் மற்றும் ஆலோசகர் கொண்ட நான்கு பேர் குழுவும் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.

மேலும் சி ஐ டி யு மாநில தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் செயலர் முத்துக்குமார் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் உடன் உள்ளனர். 40 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் சுமூகமாக எட்டப்படவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது

விரைவில் இது குறித்த சமரச தீர்வு எட்டப்படும் என அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு