ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி : ஆட்சியர் ஆய்வு
கூட்டுறவுப அச்சகத்தில் நடைபெற்ற வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உண்டான சின்னங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அன்று வாக்குச்சீட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு அச்சகத்தில் முதல் கட்ட பணிகள், கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு வண்ணங்களிலும் , கூடுதல் வார்டு உறுப்பினர்களின் போட்டி எண்ணிக்கை அடிப்படையில், மேலும் ஒரு வண்ணத்தில் என ஐந்து வகையான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூட்டுறவு அச்சகத்தில் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் குறைந்த கால அவகாசமே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.
வாக்குச்சீட்டு எடுக்கப்படுவதால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் தீ விபத்து மற்றும் பேரிடர்களை தவிர்க்க தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் கிராம ஊராட்சி செயலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் அவ்வப்போது கிராம ஊராட்சிகளில் போட்டியிடும் நபர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்படுகிறது என்பதையும் கவனித்து வருகின்றனர். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu