ரோட்டரி சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

ரோட்டரி சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்
X

காஞ்சிபுரம் ரோட்டரி சங்கங்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ  2 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ரோட்டரி சங்கங்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ 2லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள்வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவையான போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அவசர பகுதிகளுக்கு எடுத்து சென்று மருத்துவ வசதி அளிக்கும் வகையில் நண்கொடையாளர்கள் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் கலைமாமணி திரு. அபிராமி ராமநாதன் திருமண நாளினையொட்டி , காஞ்சிபுரம் அனைத்து ரோட்டரி சங்கம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் .எழிலரசன் முன்னிலையில் மாவட்ட ஆளுநர் Rtn. P. பரணிதரன் நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரிடம் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!