சாலையில் தூசு பறப்பதைத் தடுக்க சாலையில் நீர் ஊற்றும் நிர்வாகம்
சாலையில் தூசு பறப்பதைத் தடுக்க லாரியின் மூலம் நீர் ஊற்றும் காட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என தொடர்ச்சியாக ஏற்பட்டு வரலாறு காணாத மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மேலும் தொடர் மழை காரணமாக பாலம் , சாலை , சிறுபாலம் என அனைத்தும் சேதமாகியது. இன்னும் ஆற்று பாலங்கள் தொடர் வெள்ள பெருக்கு செல்வதால் பழுது நீக்க இயலாது நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம் செல்லும் முக்கிய சாலை காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் துவங்கி ராஜாம்பேட்டை வரை பெரும் சேதமடைந்து இருசக்கர வாகனம் கூட செல்ல இயலாத நிலை உருவாகியது.
மழை நின்ற பின் சிறப்பு நெடுஞ்சாலை சாலைத்துறையினர் தற்காலிகமாக செப்பனிட்டனர். இதனால் அதிகளவில் வாகனம் செல்வதால் புழுதியுடனே சுமார் 10கீமி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் , பயணிகள் என பலரும் சுவாச கோளாறு காரணமாக பாதிக்கும் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நிர்வாகம் சார்பில் கடந்த இரு நாட்களாக பலமுறை லாரி மூலம் தூசு பறக்காதிருக்க லாரி மூலம் நீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதிலமடைந்த சாலையை செப்பனிடாமல் தொடர்ந்து நீர் ஊற்றி வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu