சாலைப் பணிகள் தாமதத்திற்கு நில எடுப்பு, மற்றும் வனத்துறை அனுமதியே காரணம்: அமைச்சர் எ.வ.வேலு
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுவரும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள நிலுவை பணிகள் குறித்தும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
அதன் பின் அதற்கு உரிய விளக்கங்களை இரு துறை அலுவலர்கள் தற்போதைய நிலை குறித்து விளக்கினர். அதன்பின் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தற்போது திட்டமிடப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதன்பின் செய்தியாளர் கூட்டத்தில் , தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த பெரிய பணிகளும் நடைபெறவில்லை என்றும்,
இப்பணிகள் காலதாமதத்திற்கு வனத்துறை அனுமதி மற்றும் நில எடுப்பு விவகாரங்கள் தான் எனவும் , விரைவில் மக்கள் பிரதிநிகள் கோரிக்கைகளான சுரங்கப்பாதை மேம்பாலம் , ரயில்வே கடவு பாலம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப படும் எனவும் தெரிவித்தார்
தமிழகத்தில் எம் சாண்ட் தொழிற்சாலைக்கு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் இதற்கு அனுமதி அளிக்க தலைமைப் பொறியாளர் அளவிலான குழுவினரின் வழிகாட்டுதலின்படி அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே இதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu