காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் கணவன் கண்முன் மனைவி பலி
சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில், தொடர்ச்சியாக கனரக வாகனம் அணி வகுத்து நின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் இவரது மனைவி துளசியுடன் காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியில் வேலை நிமித்தமாக வந்து மீண்டும் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஓரிக்கை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கனரக லாரி, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உரசியது. இதில், இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்தது. அதில் பின்னால் அமர்ந்து வந்த துளசி சாலையில் விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து அறிந்த தாலுகா காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவி இறந்ததால் கணவன் கதறியழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu