காஞ்சியில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் போரட்டம்

வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் போரட்டம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மூன்று கட்ட போராட்டங்களை துவக்கிய நிலையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை துவக்கி உள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் பணியிறக்கம் பெயர் மாற்றம் விதிகள் திருத்தம் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை நடத்த மாநில குழு தீர்மானத்தின் படி இன்று முதல் போராட்டங்கள் காஞ்சிபுரம் மாவட்ட சங்க தலைவர் மகாலிங்கம் தலைமையில் துவங்கியது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் அலுவலக வாயிலில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் 14000 வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் நவீன்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கோவர்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அரசு வருவாய் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும், அடுத்த கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்துள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.

Updated On: 13 Feb 2024 6:45 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  பிபிசி நிறுவன புதிய தலைவர் ஒரு இந்தியர் தெரியுமா?
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் முகாம்...
 3. கோவை மாநகர்
  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
 4. வீடியோ
  கூட்டணிக்கு யாரும் அழைக்கவில்லை ! தேமுதிக திட்டவட்டம் !#DMDK #dmdk...
 5. தொழில்நுட்பம்
  பேடிஎம் பயனர்கள் வெளியேறுகிறார்களா? ஆப் பதிவிறக்கங்களில் பெரும்
 6. தொழில்நுட்பம்
  கூகுள் AI-ன் மனித உருவ உருவாக்கத்திறனை நிறுத்தி இருக்கு, ஏன்...
 7. இந்தியா
  புதிய நேரடி அந்நிய முதலீடு விதிமுறை: எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு...
 8. சினிமா
  சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் எப்ப வருது தெரியுமா?
 9. வணிகம்
  பாதுகாப்பான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என்ன செய்யணும்? RBI வழி...
 10. சினிமா
  பெண்கள் முட்டாள்கள்.. ஆண்களுக்காக இப்படி இருக்கக்கூடாது: ஜெயா பச்சன்