அனுமதியின்றி ஏல சீட்டு நடத்துபவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை

அனுமதியின்றி ஏல சீட்டு நடத்துபவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை
X
காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி ஏல சீட்டு நடத்துபவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஏழை எளிய மக்கள் முதல் பெரும் பணக்காரர் வரை நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை மாத தவணையில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளிலும் சிறுசேமிப்பு பழக்கத்தை தொடர்ந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொது மக்களுக்கு அதிக கழிவு தொகை கிடைக்கும் எனக்கூறி அரசு அனுமதியின்றி பல்வேறு நபர்கள் ஏலசீட்டு நடத்தி சிலர் முறையாகவும் பலர் ஏமாற்றியும் செல்லும் நிலை தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுவாகவே நிதி நிறுவனங்கள் ஏலச்சீட்டு நடத்தும் பொழுது சீட்டுதொகை முழுவதும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து அதனை பதிவாளர் அலுவலகத்தில் எலச்சீட்டில் பங்கேற்கும் நபர்கள் விவரங்கள், தவணை காலங்கள் இது போன்ற தகவல்களை அளித்து அரசு பதிவு செய்து மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை கட்டணம் செலுத்தி பதிவு செய்வர்.

இதில் ஏதேனும் முறைகேடு நடைபெற்று பணம் செலுத்திய நபருக்கு அந்நிறுவனம் பணம் தரவில்லை என்றால் வழக்கில் வங்கி டெபாசிட் பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும்.

ஆனால் முறையற்ற வகையில் நடத்தும் ஏல சீட்டில் சீட்டுப்பணம் கட்ட கூறி அளிக்கும் தகவல் மட்டுமே அதில் இருக்கும். செலுத்தியதற்கான ரசீது வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் இவர் மீது ஏதேனும் புகார் தெரிவித்தால் கூட அரசு சட்டத்தில் இவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு நபர்கள் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை அனுமதி இன்றி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இது குறித்து புகார் ஒன்று தாலுகா காவல் நிலையத்தில் பதிவு ஆகி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையின் கீழ் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நபர்களை கணக்கெடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்க வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள்பணத்தை இழந்த பின் அவர்களுக்கு காவல்துறை அறிவுரை கூறி என்ன பயன் உள்ளது.

அரசு அனுமதி பெற்று நடத்தும் நிதி நிறுவனங்கள் மீது புகார்கள் குறைவாக உள்ள நிலையில் அரசு அனுமதி இல்லாத நபர்கள் விரைவில் காவல்துறை கண்டறிந்து பொருளாதார குற்றத்தை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
பொட்டுக்கடலை..தினமும் ஒரு கைப்பிடி சாப்டுங்க..!அவ்ளோ நன்மைகள் இருக்கு அதுல!