கோயில் மனைகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

கோயில் மனைகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கக்கூட்டம் 

இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான இடங்களில் வசித்து வருவோரை அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் , காஞ்சிபுரத்தில் நீண்ட காலமாக கோயில் இடங்களில் குடியிருக்கும் சாதாரண ஏழை, எளிய பயனாளிகளை அச்சுறுத்தும் அறநிலைத்துறை நடவடிக்கைகள் குறித்து பேரவை ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயில் மனையில் குடியிருப்போர் சங்கத் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட தலைவர் வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அறநிலைத்துறை சட்டம் 34 இன் படி கோவில் மணையில் குடியிருக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல் , கோயில் நிலத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு அடிமனை வாடகை பல மடங்கு உயர்த்தியதை ரத்து செய்தல், தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழு வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலைத்துறை சட்டப்பிரிவு 78 , 79 பயன்படுத்தி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி பூட்டி சீல் வைப்பதை நிறுத்திட வேண்டும்.

கோயில் இடங்களில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், கொரோனா காலம் வரை முழுமையான வாடகை தொகையினை தள்ளுபடி செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கோயில் மனையில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai solutions for small business