காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாநகராட்சி அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை ஆணையர் கண்ணன் தலைமையில் அகற்றியபோது

காஞ்சிபுரத்தில் நடைபாதையொட்டி கடைகள், அரசு அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலைகளில் கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சாலை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.


ஆனாலும் அவர்கள் எந்தவித ஒத்துழைப்பும் மாநகராட்சிக்கு அளிக்காததும்‌, போக்குவரத்துக்கு இடையூறாக இந்த கடைகள் உள்ளதாக பொதுமக்கள் தொடர் புகார் அளித்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளாக உள்ள பேருந்து நிலையம் , கிழக்கு,மேற்கு, தெற்கு,வடக்கு ராஜவிதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருக்கும் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.


மேலும் விதிகளை மீறி மீண்டும் விளம்பர பதாகைகள் மற்றும் சாலைகளில் கடைகளை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்தார் .

சாலையோரம் உள்ள கடைகளை மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக காஞ்சிபுரம் அண்ணா அரங்க வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் என் குப்பை என்பொறுப்பு எனும் வாசகத்தை முன்னிறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனவும் இதனை நாங்களும் கடைபிடிப்போம் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story