23ம் தேதி சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு: கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் ( பைல் படம்)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022 நிதி ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பதிவுத்துறையில் சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ளது.
இது தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளதை களையும் நோக்கத்தோடு ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார் பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகிலுள்ள சார் பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார் பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிக்கபட்டது.
இதுகுறித்து அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, அரசாணை எண்.147, வணிகவரி மற்றும் பதிவுதுறையால் கடந்த 28.10.2021 வெளியிடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்கப்பட வேண்டிய குக்கிராமங்களின் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட சார் பதிவகங்களில் ஒட்டபட்டுள்ளது.
இதன்படி சார் பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23.12.2021 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே தொடர்புடைய கிராம பொதுமக்கள் இக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்ர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu