தொடரும் ரேஷன் அரிசி கடத்தல், 15டன் அரிசி லாரியுடன் மீண்டும் சிக்கியது

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல், 15டன் அரிசி லாரியுடன் மீண்டும் சிக்கியது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்களூருவுக்கு கடந்த இருந்த 15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது. கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் குடோனில் இருந்து 15 டன் ரேஷன் அரிசி கடத்திய செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை கூட்டு சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது வந்த லாரியை சோதனை மேற்கொள்ள நிறுத்தியபோது சாலை ஓரம் வைத்துவிட்டு லாரியிலிருந்து டிரைவர் தப்பி ஓடினார்

இதில் சந்தேகம் அடைந்து சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது அதை பார்க்கும்போது 15 டன் ரேஷன் அரிசி என தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விநாயகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திலேயே இது நான்காவது முறையாக பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக 15 டன் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா என மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!