காஞ்சிபுரம் திருக்கோயில் வளாகத்தில் அரிய வகை மரநாய்: வனத்துறையினர் மீட்பு
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் திருக்குறள் வளாகத்தில் உலாவிக் கொண்டிருந்த அரிய வகை மர நாய் ஒன்றினை காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனத்துறை ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்
Maranai Tamil-Maranai Tamil-காஞ்சிபுரம் திருக்கோவில் குளக்கரையில் சுற்றித்திரிந்த அரிய வகை மர நாய் உலா வருவதாக தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் மர நாயை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மரநாய் பறவைகளையும் எலிகளையும் தின்று வாழும் ஒரு பாலூட்டி வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவ்விலங்குகள் அண்டார்க்டிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை , இந்தியா இந்தோனேசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளைத் தவிர உலகெங்கும் வாழ்கின்றன.
இவை மிக வேகமாக அழகான அமைப்பில் வளைகளை உருவாக்குகின்றன. முக்கியமாக தென்னை மரங்களில் அதிக அளவில் வாழும் இது இவை இரவு நேரங்களில் மட்டுமே அதிக அளவில் உலா வரும் என்பது வழக்கம். இந்த மரநாய் நாட்டிற்கு நாடு வேறுபட்டு உருவங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டது. மேலும் இவைகள் மரங்கள் மற்றும் உயரமான பகுதிகளில் மட்டுமே வசிக்கும்.
காஞ்சிபுரம் புகழ்பெற்ற முக்கிய வைணவ திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் குளக்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விலங்கு ஒன்று சுற்றித் திரிவதாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் வனத்துறையினருக்கும் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் கோவில் குளக்கரையின் படுக்கட்டில் சுற்றித்திரிந்த விலங்கை அருகில் சென்று பார்த்தபொழுது அது மரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மர நாய் என்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறை வீரர்கள் செயற்கை இயந்திரம் உதவியுடன் மடக்கிப்பிடித்து கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று வனத்துறையிடம் வனப்பகுதியுடன் ஒப்படைத்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த மர நாயை பிடித்துச் சென்ற செய்தியறிந்து அப்பகுதி மக்கள் அதனைப் பார்க்கவும், தீயணைப்புத் துறையினர் நேர்த்தியாக அதனைப் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்ததும் , அது எந்தவித தீங்கும் பொது மக்களுக்கு விளைவிக்காத வகையில் இருந்தது உள்ளிட்டவை கண்டு பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu