காஞ்சிபுரத்தில் ராமநவமி கோலாகலம். மாலை ராமர் சீதை திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள கோதண்டராமசாமி பஜனை திருக்கோயிலில் ராமநவமி உற்சவம்
அயோத்தியில் ஆட்சி செய்த தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனான ஸ்ரீராமன், விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய தெய்வீக தன்மை கொண்ட ஸ்ரீராமபிரானின் பிறந்தநாளாக சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் நவமி ராம் நவமியாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் பஜனை கோயில் கடந்த சில தினங்களுக்கு முன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு தலைப்புகளுடன் ராமாயண கதாகாலட்சேபம் நடைபெற்று வருகிறது.
இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ராமர் சீதை, லட்சுமணன் ஆகியோருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீபராதனையுடன் அருள்பாலித்தனர்.
இன்று மாலை சீதா சமேத ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பின் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.
ராமநவமி ஒட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநவமி ஒட்டி சிறப்பு அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu