மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் : ஆட்சியர் துவக்கி வைப்பு..!

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனத்தினை துவக்கி வைத்து பார்வையிட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், *மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு* பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
அவ்வகையில் மாவட்டங்கள் தோறும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் மற்றும் பள்ளி மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சேகரித்து குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவலன்கேட் , மேட்டுதெரு , வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக சென்று மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் கூரையின் மேல் விழும் மழை நீரை சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீர் சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழை நீர் சேகரித்தல், கசிவுநீர்குழிகள் மூலம் உள்ளிட்ட கட்டமைப்புகளை பயன்படுத்துதல் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் காணொளி வாகனம் மூலம் மழை நீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை காணொளியாக வெளியிட்டு *மழைநீர் சேகரிப்போம்* *நீர்வளத்தையும் மேம்படுத்துவோம்* என்ற வாசகத்தை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் வழங்கல் நிர்வாகப் பொறியாளர் செல்வராஜ் , உதவி நிர்வாக பொறியாளர் பிந்து, உதவி பொறியாளர் நந்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu