சாலை அடையாள குறியீடுகள் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
காஞ்சிபுரம் அருகே சாலையில் அமைக்கப்படும் குறியீடுகள் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் எ.ப.வேலு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சோலார் ஒளிர்வு சாதனங்கள்,ஒளி உமிழ்வான்கள், எச்சரிக்கை பலகைகள், அறிவிப்பு பலகைகள், வேக அளவு குறித்து அறிவிப்பு பலகைகள், சிக்னல்கள் உள்ளிட்ட சாலைகளில் பயன்பபடுத்தப்படும் அடாயாள குறியீடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அடையாள குறியீடுகள் தான் தமிழக நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.ஏ., தொழிற்சாலையை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு நடத்தி தரமான அடையாள குறியீடுகளை உற்பத்தி செய்வது குறித்து தொழிற்சாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இங்கு தயாரிக்கப்படும் அடையாள குறியீட்டு பலகைகள் தான் சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
மனித உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றது எனவே நீங்கள் உற்பத்தி செய்யும் அடையாள குறியீடுகளை மேலும் தரமானதாக தயாரிக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுருத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu