மகள்களின் வாழ்வாதார உதவி கேட்டு குடும்பத்துடன் ஆட்சியரிடம் மனு.

Public gave Petition to the collector காஞ்சிபுரம் அப்பெரும் செல்வி தெருவை சேர்ந்த நெசவு தொழிலாளி, அவரது மனைவி சரசு இரு பெண்குழந்தைகள் என அனைவரும் மாற்றுத் திறனாளியாக உள்ளனர்

வாழ்வாதார உதவி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த, காது கேட்காத,வாய் பேசாத மாற்றுத்திறனாளி குடும்பத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அருட்பெருஞ்செல்வி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர்- சரசு தம்பதியினர். இவர்களுக்கு ஜீவிதா வயது8, நஷீதா வயது 6, என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவன் மனைவி மற்றும் இரு மகள்களும் பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கர் மற்றும் சரசு கைத்தறி நெசவு வேலை செய்து கொண்டு குழந்தைகளோடு வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.மாற்றுத் திறனாளிகளாக உள்ள இவர்கள் அரசு உதவித்தொகை கேட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.கோரிக்கை மனு மீது அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பாஸ்கர், சரஸ்வதி, தம்பதியினர் தங்களது இரு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேரில் வந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என கண்ணீர் மல்க சைகை பாஷையில் பேசி கோரிக்கை மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தின் பரிதாப நிலையைக் கேட்டு,கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உடனடியாக கனிவுடன் பரிசீலித்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags

Next Story