அணிவகுத்து நிற்கும் கனரக லாரிகளால் விபத்து அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை உள்ளதால் நகருக்கு முன்பாக சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள காட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது.குறிப்பாக காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் தனியார் பள்ளி ஒன்று ஐந்து ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், இப்பகுதி சாலையில் அமைந்துள்ள 15 கிலோமீட்டர் தூரம் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க நாள்தோறும் அழைத்து செல்லும் நிலையில் இந்த சாலை உள்ளது.
இந்நிலையில் இதே பகுதியில் கல் குவாரிகளும் , கல் அரவை நிலையங்களும் செயல்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்தும் சில நேரங்களில் விபத்து அபாயம் ஏற்படுகிறது என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் பள்ளி காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் இவ்வழியாக செல்ல கனரக வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
கல் அரவை நிலையங்கள் இந்த நேரத்தில் லாரிகளுக்கு சப்ளை அளிக்கக்கூடாது என கூறி வந்த நிலையில் தற்போது அதனை மீறி லாரிகளுக்கு சப்ளை அளித்து வருவதால் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு வழி சாலை என்றாலும் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் கனரக லாரிகள் ஆக்கிரமித்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலும், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கனரக லாரிகள் எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் அந்தந்த கிரஷர்களில் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட அப்பகுதி மக்கள் மற்றும் சாலை பயன்படுத்தும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu