தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா பால் , பிரட் , முட்டை வழங்கல்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா பால் , பிரட் , முட்டை வழங்கல்
X

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குழந்தைகளுக்கு பிரட் முட்டை வாழைப்பழம் பால் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகறல் கிராமத்தில் குழந்தைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழக காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் ஒரு வருடத்திற்கு வாரந்தோறும் ஒருநாள் விலையில்லா ரொட்டி, பால், முட்டை பழம் வழங்கும் விழாவினை மாவட்ட தலைவர் எஸ்.பி.கே .தென்னரசு துவக்கி வைத்தார்.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ஏ.வி.எம்.வினோத் ஏற்பாட்டின் பேரில் மாகறல் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு வருடத்திற்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை வெளியில்லா ரொட்டி, பால் , முட்டை வழங்கும் திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் எஸ் பி கே தென்னரசு கலந்துகொண்டு குழந்தைகளுக்கு ரொட்டி பால் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டு வரும் குழந்தைகளுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கிழக்கு ஓன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் வாரந்தோறும் இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் விலையில்லா இப்பொருட்களை தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய் அறிவுரையும் பேரில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற பணிகளை மாவட்டம் முழுவதும் செய்திட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தென்னரசு தெரிவித்தார்.

ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற பொருட்கள் ஊட்டச்சத்தை அளிக்கும் வகையில் அளிப்பதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர் அணி தலைவர் ராகுல், காஞ்சி ஒன்றிய கிழக்கு தலைவர் வினோத், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், மேற்கு ஓன்றிய தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story