காஞ்சிபுரம் மாவட்ட முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு வழங்கல்
உத்திரமேரூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்கி உள்ள நபர்களுக்கு உணவுகள் பரிமாறிய அமைச்சர் காந்தி
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மிகுந்த கன மழை பெய்தது. மேலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
13 துறைகளை ஒருங்கிணைத்து முப்பதுக்கு மேற்பட்ட மண்டல அளவிலான குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழை இன்று காலையிலிருந்து சற்று குறைந்து லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் தங்கி இருக்கும் பொது மக்களை வருவாய்த்துறையுடன் இணைந்து அவர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் மூன்று முகாம்களும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தலா ஒரு சிறப்பு முகாம்கள் என ஆறு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.
இதில் என்பது குடும்பங்களை சேர்ந்த 60 ஆண்கள் 79 பெண்கள் 56 குழந்தைகள் என மொத்தம் 195 பேர் தற்போது வரை தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று இதனை அமைச்சர் காந்தி நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உணவு பரிமாறினார். மேலும் உத்திரமேரூர் வட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் வசித்து வந்த லட்சுமி நாராயணன் என்பவர் விவசாய பணிக்காக அவருடைய நிலத்துக்கு சென்றபோது மின்மோட்டார் இயக்கிய நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இருந்தார்.
அவரது குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியாக அமைச்சர் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரடம் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், எம்எல்ஏக்கள் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா , உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu