காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவரும் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர் மாற்றுதல் நடைமுறையை திரும்பப் பெறுதல் , வழக்கறிஞர்கள் மீதான படுகொலையை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞரின் கூட்டமைப்பு தீர்மானத்தின்படி நீதிமன்ற வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் பார் அசோசியேசன் , லாயர் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பார் அசோசியேஷன் சார்பில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் இ.எல். கண்ணன், சிவகோபு , திருப்பதி முரளிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர்களை திரும்பப் பெறுதல் , வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

20 நிமிடம் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!