+2 ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவன்

+2 ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவன்
X

 +2 பொதுத்தேர்வு கால அட்டவணை.

உத்திரமேரூர் தனியார்‌ பள்ளி மாணவன் ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டபோது பறக்கும் படை அலுவலர் கண்டுபிடித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் +2 மற்றும் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. பிளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த ஐந்தாம் தேதி தமிழ் பாட பிரிவு உடன் அரசு பொதுத்தேர்வு துவங்கியது. மாணவ மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வுக்கான நுழைவு சீட்டு பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆங்கில பாடப்பிரிவிற்கான தேர்வு நடைபெற்றது. உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உத்திரமேரூர் பகுதியில் சேர்ந்த தனியார் ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது தேர்வு முறைகேட்டில் ஈடுபடா வண்ணம் செயல்பட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியும், 85 பறக்கும் படைகள் தேர்வை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வகையில் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும் படை அலுவலர்கள் தேர்வு அறையில் சந்தேகமாக இருந்த மாணவனை சோதனை செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்டறியப்பட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை செய்யப்படும் என எச்சரித்தும் இம்மாணவன் முறைகேட்டில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!