3200 பேர் பங்கேற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளி இளைஞர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றபோது
கொட்டும் மழையிலும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் 3217 பேர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 113 தனியார் தொழிற்சாலைகள் தங்களது நிறுவனத்திற்கான ஆட்களை தேர்வு செய்தனர்.
முன்னதாக வேலை நாடுவோர் முகாமில் உள்ள அரங்கில் தங்களை விவரங்களை பதிவு செய்து , பங்கேற்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு தகவல், கல்வி தகுதி , சம்பளம் , பணியிடம் உள்ளிட்ட தகவல்கள் குறித்த கையேடு முதல்முறையாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும் தனியார் வேலைவாய்ப்பு குறித்த இணையதளத்தில் தங்களது பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
இப்பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் தொழிற்சாலை நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் வேலை முகாமில் பங்கேற்கும் நபர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
காஞ்சிபுரத்தில் காலை முதலே சாரல் மழை பெய்து அவ்வப்போது கன மழை பெய்த நிலையிலும் காலை 11 மணி வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி நபர்கள் குவிந்தனர்.
இந்த முகாமில் 356 ஆண்களும் 212 பெண்களும் என மொத்தம் 568 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணையினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் பி செல்வம் ஆகியோரிடம் இருந்து பெற்றும் 313 பேர் பரிந்துரை கடிதம் பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன், துணை இயக்குனர் அருணகிரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இது மட்டும் இல்லாமல் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு இணையதளத்தில் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதில் பதிவும் செய்யப்பட்டனர்.
மேலும் ஏற்கனவே நடைபெற்ற அரசு போட்டித் தேர்வு வினாத்தாள்களும் வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் மதிய உணவாக புளிசாதம் , சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம் , குடிநீர் பாட்டில் என அனைத்தும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu