பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்: 63 விவசாயிகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கல்

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்: 63 விவசாயிகளுக்கு  சான்றிதழ்  ஆட்சியர் வழங்கல்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் பஜாஜ் காப்பீட்டு நிறுவன அதிகாரி அஞ்சுன் ராஜ் மற்றும் உஷா

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (2022-23) என் பாலிசி என் கையில் இயக்கம் துவக்க விழா ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (2022-23) *என் பாலிசி என் கையில்* இயக்கம் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு 63 விவசாயிகளுக்கு காப்பீடு சான்றிதழ் வழங்கினார்.

விவசாய மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பயிர்களாக நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகியவை அதிகப்படியான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயிர்களில் நெல் பயிர் முதன்மை பயிராக சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் ஆண்டுதோறும் 1, 20.000 , 1, 35,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

புயல், மழை, வெள்ளம் மற்றும் கடும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மகசூல் இழப்பீடு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பொருளாதார இழப்பில் இருந்து தங்களை தர்காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கடன் பெற்ற கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பருவம் வாரியாக பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டது.பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை 4 முறை மேற்கொண்டு விளிம்பு மகசூலைவிட (Threshold Yield) உண்மையான மகசூல் குறைவாக கிடைக்கும் பட்சத்தில் சதவீத அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

2021-22ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல், கடலை, உளுந்து மற்றும் கரும்பு பயிர்களில் பயிர் காப்பீடு செய்துள்ள 12163 விவசாயிகளுக்கு 19.50 கோடி (ரூபாய் பத்தொன்போது கோடி ஐம்பது லட்சம்) மகசூல் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.நடப்பு 2022 - 23 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் மூலம் நெல், சம்பா மற்றும் நவரை பருவத்தில் மொத்தம் 11528 விவசாயிகள் 25666 ஏக்கர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

இதுதவிர, ரபி பருவ பயிர்களான நிலக்கடலை, கரும்பு ஆகியவற்றில் 63 விவசாயிகள் 136 ஏக்கரில் பயிர் காப்பீடு செய்துள்ளனர் சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள பரப்பளவில் நெல் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மகசூல் இழப்பீடு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதே போன்று நவரை மற்றும் ரபி பருவ பயிர்களுக்கு கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை இம்மாதம் இறுதியில் தொடங்கி நடப்பு பசலி 1433 - க்குள் முடிக்கப்பட்டு மகசூல் இழப்பீட்டின் சதவீத அடிப்படையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் 63 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகைக்காண சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் (வேளாண்மை துறை) நேர்முக உதவியாளர் கணேசன் , வேளாண்மை துறை இணை இயக்குனர் இளங்கோவன் , பஜாஜ் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரி அஞ்சன்ராஜ் , மேலாளர் உஷா மற்றும் விவசாயிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா