/* */

பிரசாரத்திற்கு சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் அதிமுகவை ஆதரித்து காலை 10 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் எனக் கூறிய நிலையில் 12 மணிக்கு கடும் வெயிலில் பிரசாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பிரசாரத்திற்கு  சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள் வெயில் தாக்கத்திலிருந்து மீள தலையில் சேலையை மூடியபடி காத்திருந்த காட்சி..

பிரச்சாரத்திற்கு தலைவர்களே சொன்ன டைமுக்கு வாங்க.. கடும் வெயில் காஞ்சியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவதிப்பட்ட முதியோர்கள் நிலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக முழுவதும் கோடை வெப்பம் தற்போது இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகவும், முதியோர்கள், கால்நடைகள் என அனைத்து தரப்பினரும் இந்த வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் பிரச்சாரங்களில் முதல் நிலை தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

கோடை வெப்பம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வெப்ப அலை வீசுவதும் , அதன்பின் எந்தவித குளிர்ந்த காற்றும் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க காலை 10 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது வெய்யில் கொடுமை தாங்காமல் குடைக்குள் இளைப்பாறிய பெண்கள்

இதனால் விஜயகாந்த் இறப்பிற்கு பின் பிரேமலதாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என பல சுற்றுப்பட்டி கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், 50 -65 வயது தாண்டிய மூத்த குடிமக்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த கடைகளின் வாயிலில் பல மணி நேரம் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் பெண்கள் தங்கள் புடவை முந்தானையினை கொண்டு தலையை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வண்ணம் ஈடுபட்டனர். அருகில் இருந்த குடை , சிறிய கடைகள், ஒலிபெருக்கியின் நிழல் என அனைத்திலும் தஞ்சமடைந்து காணப்பட்ட காட்சி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்தாலும் இது போன்ற மூத்த குடிமக்கள் தற்போதைய காலத்தில் இதனை தவிர்க்கலாம் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 3 April 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?