/* */

‘கச்சத்தீவு பிரச்சினைக்கு காரணம் திமுக’ பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

கச்சத்தீவு பிரச்சினைக்கு திமுக தான் காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

HIGHLIGHTS

‘கச்சத்தீவு பிரச்சினைக்கு காரணம் திமுக’ பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

கச்சத்தீவு மட்டுமல்ல காவிரி இலங்கை தமிழர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் காரணம் திமுக தான் என பிரமேலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

அதிமுக தேமுதிக கூட்டணி சார்பாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ராஜசேகர் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்டார். வேட்பாளரை அறிமுகம் செய்து அதிமுக தேமுதிக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வரும் 19ஆம் தேதி காலையிலேயே வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று வாக்குகள் செலுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் திமுக கள்ள ஓட்டு போட அதிக வாய்ப்பு உள்ளது அவர்களிடம் ஆள் பலம் அதிகார பலம், பண பலம் என அனைத்தும் உள்ள நிலையில் அதை நாம் முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இதேபோல் கச்சத் தீவு தீவு விவாகரத்தில் திமுக துரோகம் செய்தது மட்டுமல்லாது காவிரி நீர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்திற்கும் காரணம் திமுகவே என கடும் குற்றம் சாட்டினார்.

இந்த பரப்புரையின்போது முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஏகாம்பரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் வேனில் நின்றபடியே பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

Updated On: 3 April 2024 11:54 AM GMT

Related News