மாதிரி வாக்குபதிவின் போது மின்தடை .. ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை..

மாதிரி வாக்குபதிவின் போது மின்தடை .. ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை..
X

36 வந்து வார்டு இடைத்தேர்தல் மின்தடை ஏற்பட்ட நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கும் பணி.

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டுக்கான இடைத்தேர்தலில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவின் போது திடீர் மின்தடை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 வது வார்டுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவிற்காக தியாகி நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு அதற்கான குடிநீர், கழிவறை , ஜெனரேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காலை 6:30 மணி அளவில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைமுறை வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்றது. மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற பின் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

சுமார் பத்து நிமிடம் மின்தடையால் செல்போன் ஒளி, மெழுகுவர்த்தி உதவியுடன் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு மையத்திற்கு மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர் வைக்கப்பட்ட நிலையில் அதை இயக்காமல் மின்வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் மின்தடை குறித்து புகார் தெரிவித்து இருந்தனர்.வாக்குப்பதிவு பள்ளி முன்பு ஜெனரேட்டர் ஒரு காட்சி பொருளாகவே இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!