பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

நீதிமன்றம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் வாசனை சிறைக்கு அழைத்து செல்லும் காவல்துறையினர்.

பிரபல யு டியூபர் வாசன் காஞ்சிபுரம் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரபல யூட்யூபரும் இருசக்கர வாகன சாகச வீரருமான டிடிஎப் வாசன் ஐந்து பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரபல யூட்யூப் பிரமுகரும் , இருசக்கர வாகன சாகச வீரர் என திகழும் டிடிஎப் வாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து வேலூருக்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை எழுந்து அவரது வாகனம் அவருடன் தூக்கி வீசப்பட்டதில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் பாலு செட்டி காவல் நிலையம் ஆய்வாளர் வாசன் மீது 279, 337 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் IPC 308, மற்றும் வாகன சட்டப்பிரிவு 184 , 188 கூடுதலாக இணைக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துவரப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில், நீதிபதி திருமதி இனிய கருணாகரன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.

வாசன் தரப்பிலிருந்து வழக்கறிஞர் கதிரவன் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அதனையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து பலத்த காவல் பாதுகாப்புடன் டிடிஎப் வாசன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பல்வேறு ஆதரவாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும் இளைஞர்களை முற்றிலும் திசை திருப்புகிறார் என்ற கண்டனம் பெற்றோர்கள் இடையே இருந்து வரும் நிலையில், முதல்முறையாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story