காஞ்சிபுரத்தில் ஜி கே வாசன் தலைமையில் பொங்கல் விழா
காஞ்சிபுரத்தில் தமாகா சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் தலைவர் ஜி கே வாசன்
தொண்டன் திருமணத்தில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டதால் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல இயலாது. மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது தவறு என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறினார்
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொங்கல் திருவிழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் மற்றும் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் புதுப் பானையில் பொங்கலுக்கு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கபடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போல போட்டி என பல்வேறு வகை போட்டிகள் பொதுமக்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நடைபெற்றது.
இதற்கு முன்பாக பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தலைவர் ஜி கே வாசன் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டார்.
மேலும் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அரிசி புடவை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் , சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதை தடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
உதயநிதி துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது வதந்தி என முதல்வர் கூறியது குறித்து கேட்டபோது வதந்திக்கு பதில் சொல்ல தேவையில்லை என தெரிவித்தார்.
மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் தினத்தன்று தொண்டரின் திருமணத்தின் கலந்து கொள்ள உறுதி அளித்துள்ளதால் அதன் பிறகு நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கேளம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு எந்த வித இணைப்பு அடிப்படை வசதிகளின்றி இருப்பதாகவும் இதனை செய்ய தவறி திறக்கப்பட்டது தவறு என தெரிவித்தார்.
நியாய விலைக் கடைகளில் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என்றும் அதை பெறுவது மக்களின் உரிமை என்றும் ஒருபோதும் அதை தடை செய்யக்கூடாது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் , மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பாபு நாயுடு , நகர காங்கிரஸ் தலைவர் சுகுமார், நகர மன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிராமி சங்கர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu