காஞ்சிபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் போலீசின் கணவர் கைது

காஞ்சிபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் போலீசின் கணவர் கைது

தலைமை பெண் காவலர் டில்லி ராணியை அரிவாளால் வெட்டிய அவரது கணவர் மேகநாதன் 

காஞ்சிபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் போலீசின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இரு குழந்தைகளுடன் டில்லி ராணி வசித்து வந்த நிலையில் கணவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காஞ்சிபுரம் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்து அது தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்று நேற்று பணிக்கு திரும்பி பணிகளை நிறைவு செய்த பின் மதிய உணவிற்காக சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு முன்பு சங்கர மடம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்த நிலையில் அவரது கணவன் மேகநாதன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரை மேகநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்க முயன்ற போது அதனை தற்காப்புக்காக தடுத்த டில்லி ராணியின் வலது கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.

பலத்த ரத்த போக்கு வெளியேறிய நிலையில் மயங்கிய அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி செய்து அதன் பின் சென்னை ஸ்டான்லி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இது குறித்து பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான இடத்தில் உள்ள சிசிடிவிக்கு காட்சிகளை ஆராய்ந்ததில் டில்லி ராணியை கத்தியால் குத்தியது அவரது கணவர் மேகநாதன் என்பது உறுதி செய்யப்பட்டு பாண்டிச்சேரி பகுதியில் தங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மேகநாதன் காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு விசாரணை மேற்கொண்ட பின் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

தற்போது தலைமை காவலர் டெல்லி ராணிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது சற்று அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story