/* */

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் பா.ம.க. பிரமுகர்

தமிழக பா.ம.க. துணைத் தலைவராக பணியாற்றி வந்த ஆ.செந்தில்குமார் பா.ஜ.க.வில்அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார்.

HIGHLIGHTS

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் பா.ம.க. பிரமுகர்
X

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த ஆ.செந்தில்குமார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் கீழான பா.ஜ.க. பல போராட்டங்களிலும், ஆளுங்கட்சியை எதிர்த்து செய்யும் அரசியலிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் பிற கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பா.ஜ.க வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளார். இது காஞ்சிபுரம் பா.ம.க வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.செந்தில்குமார் என்னும் பா.ம.க.வின் துணைத் தலைவர் கடந்த 2003ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நகரில் தொழிற்சங்கத் தலைவராக பா.ம.க வில் தனது அரசியல் வாழ்வை துவங்கினார்.

2005ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக உயர்ந்தவர்2011ஆம் ஆண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனார். பிறகு 2015ஆம் ஆண்டில் மாவட்ட தலைவராக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்தார்.2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகாலம் பா.ம.க.வில் துணைத்தலைவராக பதவி வகித்தார்.

இவர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு தலைமையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.


Updated On: 16 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!