நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில் தனியார் பள்ளி +2 மாணவர்கள் வழிபாடு

நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில்  தனியார் பள்ளி +2 மாணவர்கள் வழிபாடு
X

+2 தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் மாணவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளை பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு நுழைவுச் சீட்டை வைத்து வழிபட்டனர்.

நாளை தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு தேர்வு துவங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் பள்ளி தாளாளர் தலைமையில் காஞ்சி குமரக்கோட்டம் என அழைக்கப்படும் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்று தேர்வு நுழைவு சீட்டை வைத்து சிறப்பான தேர்வெழுத சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.

அனைத்து மாணவ மாணவிகளும் வரிசையாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags

Next Story
ai marketing future