வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் பழமையான அரசமரம், ஆலமரம் நவீன முறையில் நடவு
வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு திட்டம் மற்றும் தன்னார்வு அமைப்பு ஆகியோர் இணைந்து இந்த பழமையான மரங்களை நடவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS

வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு திட்டம் மற்றும் தனியார் பசுமை தன்னார்வு அமைப்பினர் வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நடவு செய்யப்பட்டது
காஞ்சிபுவலாஜாபாத் அருகே தனியார் நிலத்தில் வெட்டப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான அரச மரம், ஆலமரம் வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நவீன முறையில் நடப்பட்டது..
இதையடுத்து வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்திடமும், வாலாஜாபாத் ரயில் நிலைய நிர்வாகத்திடமும் அணுகி மரங்களை நட அனுமதி பெற்றனர்.இதனைத் தொடர்ந்து நத்தாநல்லூர் கிராமத்தில் இருந்து அரச மரமும்,ஆல மரமும் வேருடன் பிடுங்கப்பட்டு மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு மரத்தை லாரி மூலம் வாலாஜாபாத் ரயில் நிலையம் வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.
ரயில் நிலைய வளாகத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் தலைமையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற நிர்வாகத்தினரும் தன்னார்வ அமைப்பினரும் இணைந்து அரச மரத்தையும், ஆல மரத்தையும் நவீன முறையில் நடும் பணியை மேற்கொண்டனர்.
50 ஆண்டுகள் வளர்ந்து பழமையான மரங்களை வெட்டி வீணடிக்காமல் நவீன முறையில் வேறு இடத்தில் நட்டு பராமரிக்கும் செயலை மேற்கொள்ளும் வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட அலுவலர்களையும், தன்னார்வ அமைப்பினரையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.