கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை இரு நாட்களில் கைது செய்ய கோரி மனு
கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி சிறப்பு தனி ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த கலியனுர் கிராம ஊராட்சி மன்ற தலைவியாக செயல்படுபவர் வடிவுக்கரசி ஆறுமுகம். இவரது கணவர் ஆறுமுகம் தமிழக அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து தற்போது விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வடிவுக்கரசி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனைக்கு தனது கணவருடன் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளியே அமர்ந்த ஆறுமுகத்தை இரு மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் தாக்குதல் நடத்தினர்.
இதில் தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டு காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று வரை இதற்கு காரணமாக இருந்த இரு மர்ம நபர்களையும் சி.சி.டி.வி. காட்சிகள் கிடைக்கப் பெற்றும் காவல்துறையால் கைது செய்யப்பட வில்லை.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் தலைமையில், மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கமலநாதன், லார்ட்ஸ் , பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி பிரபாகர் மற்றும் கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் தலைவர் லெனின் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு தனி ஆய்வாளர் பிரபாகரிடம் மனு அளித்தனர்.
இக்கோரிக்கை மனுவில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல ஆண்டுகளாக மாவட்ட குழு உறுப்பினராக செயல்பட்டு பல்வேறு அரசு நல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு பெற உதவியாக செயல்பட்ட ஆறுமுகத்தை, இவருக்கு எவரிடமும் பகையோ அல்லது முன்விரோதமோ இல்லாத நிலையில் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை செய்துவிட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் , சமூகத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் பெருகி உள்ள காரணத்தினால் சிறார்களை பயன்படுத்தி கொலை வெறி தாக்குதல்கள் ஒருபுறம் பெருகி உள்ளன.
மறுபுறம் நில புரோக்கர்களின் அத்துமீறல்கள் உள்ளாட்சித் தேர்தல் பகைமைகள் என அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வரப்படுகிறது. வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் தாக்கப்பட்டது, புரிசை தலைவரின் மகன் தாக்கப்பட்டது , காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ராதா, கணவர் , மாமனார் ஆகியோர் தாக்குதல் என அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆவார்.
இது போன்ற தாக்குதல்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் , ஆறுமுகம் கொலை முயற்சி நபர்களை உடனடியாக இரு தினங்களுக்குள் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் இக்கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது , இரு தினங்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலை ஏற்பட்டால் வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டம் காஞ்சிபுரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம், தனது இரு பெண் குழந்தைகளுடன் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு தனி ஆய்வாளரிடம் மனு அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu