நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் : காஞ்சிபுரம் மாவட்ட திமுக

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் : காஞ்சிபுரம் மாவட்ட திமுக
X

 காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்.

திமுகவினர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தவிர்த்து காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது மட்டுமில்லாமல் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினர் நாளை முதல் மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் விருப்ப மனுக்கள் பெற்று அதனைப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் அளிக்கலாம் என தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட திமுகவினர் ஆர்வமாக தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் உள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி என்பதால் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அதிக ஆர்வத்தில் இளைஞர்களும், மூத்த நிர்வாகி களும் ஆர்வம் கொண்டுள்ளனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!