தீபாவளியையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பாண்டவர் தூத பெருமாள்..!

தீபாவளியையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பாண்டவர் தூத பெருமாள்..!
X

தீபாவளி நன்நாளை ஒட்டி , 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ பாண்டவர் தூத பெருமாள் திருக்கோயிலில் இன்று கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த  ஸ்ரீ எம்பெருமான்

108 திவ்யதேசங்களில் 48 வது திவ்ய வேகமாக விளங்கி வருவது ஸ்ரீ காஞ்சிபுரம் பாண்டவர் தூத பெருமாள் திருக்கோயிலில் வருடம் தோறும் தீபாவளி என்று கருட சேவை நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

தீபாவளி திருநாளை ஒட்டி 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ பாண்டவர் தூதுவ பெருமாள் ர கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் , 48வது திவ்ய தேசமாக விளங்கும் ஸ்ரீ பாண்டவர் தூதுவ பெருமாள் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில்கிருஷ்ணர் 25 அடி உயரத்தில், அமர்ந்த நிலையில் மூலஸ்தானத்தில் காட்சி தருவது இந்த தலத்தில் மட்டுமே. இது வேறு எங்கும் காண முடியாத சிறப்பான அம்சமாகும்.

அவ்வகை சிறப்பு பெற்ற திருக்கோயிலில் வருடம் தோறும் தீபாவளி திருநாள் என்று கருட சேவை நிகழ்வு நடைபெறும். அவ்வகையில் இன்று காலை சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு பல்வேறு வண்ண மலர்கள் சூடி கருட வாகனத்தில் ஸ்ரீ பாண்டவ தூதர் பெருமாள் மாத வீதிகள் மற்றும் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வழிநெடுகிலும் தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு சடாரி சேவை மற்றும் துளசி பக்தர்களுக்கு பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

ஒரே நாளில் பாண்டவர் தூதர் பெருமாள் கருட வாகனத்திலும் , அதனைத் தொடர்ந்து லஷ்மி சரஸ்வதி உடன் காஞ்சி காமாட்சியும், அதன்பின் ஆதி காமாட்சி என ராஜவீதியில் பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்களில் திரு தெய்வங்கள் எழுந்தருள பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் திருநாளை கொண்டாடிய நிலையிலும் சாமி தரிசனம் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.

Tags

Next Story