பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு காரணமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்: எஸ்பி தகவல்

பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு காரணமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்: எஸ்பி தகவல்
X

காஞ்சிபுரம் எஸ். பி சண்முகம்

பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவ வீரர்கள், வெப் கேமரா மற்றும் உன் பார்வையாளர் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதட்டமான வாக்குச் சாவடிகள் உருவாக காரணமானவர்களை கண்டறிந்து அவர்களிடம் சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் வகையில் 69 நபர்களிடம் இதுவரை எழுத்து மூலம் பெறப்பட்டுள்ளதாக எஸ். பி சண்முகம் தகவல்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பணி அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை புகார்களாக தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சி - விஜில் செயலி குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட எஸ்பி சண்முகம் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மற்றும் முன்பு பார்வையாளர் மற்றும் துணை ராணுவத்தினர் பணி அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

மேலும் பதட்டமான வாக்குச்சாவடியாக உருவாக யார் காரணங்கள் என கண்டியப்பட்டு அவர்களிடம் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் வகையில் செயல்படுவேன் என இதுவரை 69 நபர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் சங்கீதா, தேர்தல் வட்டாட்சியர் தாண்டவ மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings