காஞ்சிபுரத்தில் அரசின் நல திட்ட உதவிகள் வழங்கல் : அமைச்சர் பங்கேற்பு..!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பரசன் பெண்மணிக்கு பட்டா வழங்கியபோது. உடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ 2.84 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் , பல்வேறு துறை சார்பில் 2989 பயனாளிகளுக்கு ரூ 59.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் , மாபெரும் பட்டா வழங்கும் விழா, மாவட்ட முழுவதும் பல்துறைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டங்கள், பல்துறை அலுவலகம் சார்பில் கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற மன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதனை தொடர்ந்து வருவாய்துறை சார்பில் ரூ 51 கோடி மதிப்பீட்டில் 1647 பயனாளிகளுக்கு பட்டா , கூட்டுறவுத்துறை சார்பில் 91 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 8 கோடி மதிப்பில் கடனுதவி , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ 15 கோடி மதிப்பில் 115 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 44 பயனாளிகளுக்கு ரூ 5.19 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் , திருமண நிதியுதவிகளை என 2989 பயனாளிகளுக்கு சுமார் ரூ 59.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அனைவரும். வழங்கினர்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை ரூ126 கோடி மதிப்பில் 6904 பயனாளிகளுக்கு பட்டா வழங்கபட்டுள்ளதாகவும், விடுபட்ட அனைவருக்கும் உரிய விசாரணை மேற்கொண்டு விரைவில் அரசு விதிகளை பின்பற்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி , சரவணக்கண்ணன், மேயர் மகாலட்சுமி, மாவட்ட குழு துணை தலைவர் நித்யா மற்றும் பல்துறை அலுவலர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu