மாணவ பருவத்திலேயே பிறருக்கு பாடம் எடுக்கும் அசத்தல் மாணவர்கள்

மாணவ பருவத்திலேயே  பிறருக்கு பாடம் எடுக்கும்  அசத்தல் மாணவர்கள்
X

மாணவர்கள்  பா.தீபக், மற்றும்  மு.சஞ்சய்

காஞ்சிபுரத்தில் மாணவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதை காஞ்சி டிஜிட்டல் டீம் செய்து வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து காஞ்சி டிஜிட்டல் டீம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் மெருகூட்டும் விதமாக கொரோனா காலகட்டத்தில், மாணவர்கள் கல்வி பயில இயலாத சூழ்நிலையில், மாணவர்களுக்கு இணையவழி பாடம் நடத்த திட்டமிட்டு மாணவர்கள் புது வாசல் இணைய வழி வகுப்புகள் என்ற தலைப்பில் காஞ்சி டிஜிட்டல் டீம் ஆசிரியர்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடம் எடுத்தனர்.

அதன்படி கல்வி 40 என் செயலியை உருவாக்கி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காணொளி மூலம் கல்வியை அளிக்கும் பணிக்காக சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இணையவழி தேர்வு நடத்தி, அதன் மூலம் புதிய விஷயங்களை மாணவர்களை கற்று அவர்கள் பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என தயார்படுத்துகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருவிமலை உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கும், ஆறாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய் , தீபக் ஆகியோர் அப்பகுதியில் வீடுகளில் உள்ள மின் சாதனங்களை சாஃப்ட்வேர் கோடிங் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கும் சாப்ட்வேர்களை கண்டுபிடித்தனர். மேலும் அதுகுறித்து ஆன்லைனில் மற்ற மாணவர்களுக்கும் 30 நிமிடம் பயிற்சி அளித்து அவர்களது சந்தேகத்தை தீர்த்து வருவது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இவர்களது பெற்றோர்கள் நெசவாளி மற்றும் சமையல் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், தங்கள் கல்வி கற்கும் பருவத்தில் இதுபோன்ற புதிய விஷயங்களைக் கற்று பிறருக்கு அதை தெரிவிக்கும் அரிய சந்தர்ப்பத்தை அளித்த டிஜிட்டல் டீமுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது மாணவ பருவத்தில் ஆசிரியராகவும் செயல்படுவது பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings