கலைஞர் 6ம் ஆண்டு நினைவஞ்சலி : காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அமைதி பேரணி

கலைஞர் 6ம் ஆண்டு நினைவஞ்சலி : காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அமைதி பேரணி
X

திமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியில் நடைபெற்ற அமைதி பேரணி

காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அமைதி பேரணி, காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே புறப்பட்டு மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்தது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் , மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக சென்று கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி நினைவஞ்சலி செய்தனர்.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று திமுக சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.

மாவட்டங்கள் தோறும் அமைதி பேரணி மேற்கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மற்றும் மாநில மாணவரணி செயலாளரும் எம்எல்ஏவான எழிலரசன், மேயர் மகாலட்சுமி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே இருந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.


இதில் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முழுவதும் உள்ள கிளைகளில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!