பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல் போராட்டம்

பரந்தூர் விமான நிலைய  உயர்மட்ட குழு வருகையை கண்டித்து  சாலைமறியல் போராட்டம்
X

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க உள்ள நிலையில் அதனை கண்டித்து 424வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஏகனாபுரம் பகுதி மக்கள் அறிவிப்பு பலகை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நீர்நிலைகளை ஆய்வு செய்ய 26 ஆம் தேதி மச்சநாதன் தலைமை யிலான உயர்மட்டகுழு வருகிறது

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் காஞ்சிபுரம் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதன்பின் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் , ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை ஒருங்கிணைத்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க தேர்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தையும் கையகப்படுத்த திட்டம் உள்ளதாக அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஒருங்கிணைந்து கடந்த 424 நாட்களாக சாலை மறியல், மொட்டை அடிக்கும் போராட்டம், கிராம சபை புறக்கணிப்பு, கிராம சபை கூட்டங்களில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள், கோட்டை நோக்கி நடைபயணம் , அமைச்சருடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை என பல்வேறு நிலைகளை கடந்து இன்று வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரம் வரையில் தந்த முதல்வருக்கு கருப்பு கொடி காட்டுவோம், கோ‌பேக் ஸ்டாலின் என பலூன் பறக்க விடுவோம் என அறிவித்த நிலையில், ஆட்சியருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளருடன் சந்திக்க நேரம் பெற்று தறுவதாக கூறியதால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான குழுவினர் இரண்டாவது முறையாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வருவதாக அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை கருப்பு கொடியுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரோன் மூலம் நீர்நிலைகளை அளப்பதாக கூறி ஒட்டுமொத்த விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்து உள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?