விவசாயிகளின் நண்பன் எனக் கூறிக் கொள்ளும் எடப்பாடி எங்கே ? ஏகனாபுரம் மக்கள் கேள்வி..?
ஏகனாபுரம் கிராமத்தில் பசுமை விமான நிலையத்திற்கு நில ம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானதை கண்டித்து இரவு நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அறிவிப்பு வெளியான நாள் முதலே பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் நாள்தோறும் இரவு நேரங்களில் ஏகனாபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் பல்வேறு நூதன வழிகளிலும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு அரசியல் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் மாநில அரசு விமான நிலையத்திற்கான நிலை எடுப்புக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இரண்டு அலுவலகங்கள் காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்டு ஒவ்வொரு கிராமமாக நிலை எடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு ஆட்சேபனை இருப்பின் நிலையெடுப்பு அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கலாம் என அறிவித்தது.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் முழுவதும் வீடுகள் , விவசாய நிலங்கள் ஏரிகள் என அனைத்தும் முழுமையாக இத்திட்டத்தில் இணைக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஒரு பிடி மண்ணை கூட விடமாட்டோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று நில எடுப்பு குறித்த அறிவிப்பு அக்கிராமத்தின் ஒரு பகுதிக்கு வெளியிடப்பட்டது.
இதனைக் கண்டித்து இன்று கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்ப்பு கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதில் உரையாற்றிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி,, இதுவரை நடைபெற்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு சீமான் வேல்முருகன் திருமாவளவன் என பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்து வந்து, கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.
ஆண்ட கட்சியான அதிமுகவின் பொது செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு விவசாயி எனவும் விவசாயிகளுக்காக அதிமுக போராடும் என கூறிவரும் நிலையில் ஏகனாபுரம் கிராமத்திற்கு மட்டுமல்ல இதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களுக்கு ஒரு முறை கூட நேரில் வந்து விவசாயிகளை சந்தித்து தங்கள் கண்டனங்களை தெரிவிக்காதது ஏன் ? என கேள்வி எழுப்பினர் .
சிலருடைய சுயநல லாபத்திற்கு பரந்தூர் பகுதிக்கு விமான நிலையத்தை வரவைத்துவிட்டு அவர்கள் குடும்பம் மட்டும் வாழ நினைப்பதும் விவசாயிகள் எங்கு செல்வார்கள் என்ற நிலையை மறந்து தொடர்ந்து இதுபோன்ற நிலையை கடைபிடித்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu