பஞ்சாயத்து ராஜ் சட்டம் வலிமையானது: சமூக ஆர்வலர் மேத்தா பட்கர்

பஞ்சாயத்து ராஜ் சட்டம் வலிமையானது: சமூக ஆர்வலர் மேத்தா பட்கர்
X

பசுமை விமான நிலையம் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய சமூக ஆர்வலர் மேத்தா பட்கர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் கலந்து கொண்டார்.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் வலிமையானது; அதுவே கிராமத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கக்கூடியது. தமிழ்நாடு முதல்வர் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்க கண்டனக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் மேதாபட்கர் பேசியுள்ளார்.

சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்காக சுமார் 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த 4500 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் மற்றும் 13 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 219 ஆவது நாளாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் நாள்தோறும் இரவு நேரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் நேற்று ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் மேத்தாபட்கர் மற்றும் கூடங்குளம் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய சமூக ஆர்வலர் மேத்தா பட்கர், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கிராமத்தில் வளர்ச்சியை தீர்மானம் இருக்கக்கூடிய விதிகள் உள்ளது அது எது நல்ல திட்டம், எது வேண்டாம் என தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதற்கு அதிகம் உள்ளது எனவும், அதனால் வளர்ச்சி வேண்டாம் எனக் கூறும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

நேற்று தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி கண்டது போல் இந்த பகுதி மக்களும் இத்திட்டத்தை கைவிடப்பட்டால் மகிழ்ச்சி அடைவார்கள். விமான நிலைய திட்டத்தால் நிலங்கள் அழிக்கப்பட்டால் விவசாயம் அனைத்தும் இழப்பு ஏற்பட்டு உணவு எப்படி கிடைக்கும் என்பதும், பணத்தை சாப்பிட இயலுமா எனவும் ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பினார்.

ஏரிகள் நீர்நிலைகளை அழித்து வளர்ச்சி காண்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதும் அதனால் அத்திட்டத்தை வேறு இடத்திற்கு முதல்வர் மாற்ற உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்