காஞ்சிபுரத்தில் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, வீடியோ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு

காஞ்சிபுரத்தில் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, வீடியோ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு
X

ஓராண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யப்பட்ட நலதிட்ட மலரை வெளிப்பட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் செயல்படுத்தபட்ட மக்கள் நல திட்டங்கள் ஏராளம்‌ என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்து.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பாக ஒராண்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்" என்ற ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் / முதல்வரின் முகவரி திட்டத்தில் 8,176 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 4,519 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 53,769 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில், 107,09,475 மகளிர், 9,584 திருநங்கைகள் மற்றும் 62,000 மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளுபடி திட்டம், 18,485 பயனாளிகள் 255.33 கிலோ கிராம் தங்க நகைக் கடன் ரூ.64.10 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

கூட்டுறவுத்துறையில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நிலுவையில் இருந்த 13,515 விவசாய கடன்கள் ரூ.85.67 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இதனை பொதுமக்கள் அறியும் வண்ணம் கண்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக வீடியோ வாகனம் மூலம் கிராமங்கள் தோறும் சாதனை வீடியோ ஒளிபரப்பப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா , மாநகராட்சி மேயர் மாகலட்சுமி யுவராஜ் , ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யாசுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், துணைத்தலைவர் திவ்யபிரியாஇளமது உள்ளிட்ட துறை அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!